2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

முஸ்லிம்களின் கல்வி நிலையை சிந்தித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் வெட்கமடைய வேண்டும்:பிரதியமைச்சர் பைஸர்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

முஸ்லிம் மக்களின் இன்றைய கல்வி நிலையை சிந்தித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும் என்று சுற்றாடல்த்துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

அக்குறணை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் பேசும்போதே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா உரையாற்றுகையில்,

எமது நாட்டில் கணக்கெடுப்புகளின்படி நூற்றுக்கு எட்டு வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இருந்தாலும் பல்கலைக்கழகம் செல்வது நூற்றுக்கு 1.6 வீதமே ஆகும். இந்நிலையை சிந்தித்து முஸ்லிம் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்.

முஸ்லிம்களுக்கு கல்வியே முன்னேற்றத்துக்கு வழியாகும்.

கல்வியை பெற்றுக்கொள்வதற்கும் அதனை எமது பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் நாங்கள் எம்மால் இயன்றவற்றை செய்ய வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .