2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

தோட்டத்தொழிலாளர்களுக்கான தீபாவளி பண்டிகை முற்பணத்தில் மாற்றமில்லை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இம்முறையும் தீபாவளி முற்பணமாக 4,500 ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் மேற்கொள்ளப்படவுள்ள கூட்டொப்பந்தத்திலேயே தீபாவளி பண்டிகை முற்பணத்தினை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
 
தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி பண்டிகை முற்பணத்தினை ஆறாயிரம் ரூபா வரை அதிகரித்து வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி பண்டிகை முற்பணத்தில் எவ்வித அதிகரிப்பும் இடம்பெறவில்லை. இவ்விடயம் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கத்திடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .