2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பெண்ணொருவர் வெட்டிக் கொலை

Super User   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)


மொனராகலை, வெல்லவாய ரன்தெனிய கீரியகொல்ல பிரதேசத்தில் இன்று காலை இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இரு பெண்கள் மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் ரன்தெனிய கீரியகொல்ல என்ற இடத்தை சேரந்த சு.னு.கருணாவதி(36) என்பவராவார்.

சந்தேக நபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. குடும்பத்தகராறே இந்த கொலைக்கு காரணமாயிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--