2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அதிகாரி எனக் கூறி பொது மக்களை ஏமாற்றிய நபர் கைது

Kogilavani   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நதீர் சரீபுதீன்)
கடந்த சில மாதங்களாக தன்னை பொலிஸ் அதிகாரியென கூறி பொது மக்களை ஏமாற்றி பணம், நகைகள் என்பவற்றை அபகரித்து வந்த நபரை அயகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்துப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர் என்றும் அயகம, கலவானை, கிரியெல,  நிவித்திகலை, இங்கிரிய,  இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் பண மோசடிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .