Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.எம்.ரிஃபாத்)
கூட்டுறவு, கூட்டுத்தாபனம் மற்றும் வர்த்தகத்துறை தொழிலாளர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை கண்டி நகரில் முன்னெடுக்கப்பட்டது.
பொருள் விலையேற்றம், சம்பள பற்றாக்குறை, தொழிலாளர் பிரச்சினை, ஊழியர் சேமலாப நிதி பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டி வை.எம்.பீ.ஏ கட்டிடத்துக்கு அருகிலிருந்து ஊர்வலமாகச் சென்று தலாதா வீதியில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.
தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குதல், தற்காலிக தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குதல், வாழ்க்கைச் செலவை குறைத்தல், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்தல், ஊழியர் சேமலாப நிதி பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
4 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
27 Jan 2026