2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மஸ்கெலியாவில் சட்டவிரோத கள்ளு விற்பனை; சந்தேகநபர்கள் கைது

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துனுதுடுஓயா, சிவனொளிபாதமலைப் பிரதேச காட்டில் நேற்று நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது அந்தப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளு விற்பனையில் ஈடுபட்டு வந்து குழுவொன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து 30 லீற்றர் கள்ளும் அதனுடன்; தொடர்புடைய பொருட்களும் கைப்பற்றப்பட்டன. கிதுல் மரங்களிலிருந்து பெறப்படுகின்ற இந்தக் கள்ளினை பாடசாலை மாணவர்களும் பிரதேச மக்களும் நீண்டகாலமாக பருகி வந்துள்ள நிலையிலேயே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இருவர் கிதுல்மரங்களில் ஏறி கள்ளு சேகரிப்பவர்கள் என்றும் ஏனைய இருவரும் சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவர்களை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஹட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .