Super User / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்தய சேனநாயக்க)
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் விவசாய பீடங்கள் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் பேராசிரியர் கே.பிரேமரத்ன டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
ஏற்கெனவே சில பீடங்கள் மூடப்பட்டுள்ளதாலும், வெவ்வேறு பீடங்களைச் சேர்ந்தவர்களுக்கு பொதுவான நிகழ்சிகளும் இருப்பதனாலும் உப வேந்தர் ஆலோசனை குழு தீர்மானித்ததற்கிணங்க கலை, விவசாய பீடங்கள் மூடப்பட்டதே தவிர பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக மூடப்பட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விஞ்ஞான பீடங்கள் கடந்த வாரம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
8 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
19 minute ago
2 hours ago