2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

துன்மங்சல நடமாடும் சேவை

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஏற்பாடு செய்த துன்மங்சல நடமாடும் சேவை  பதுளையில் இன்று காலை அமைச்சர் ஜோன் செனவிரத்னவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல்வேறு பிரச்சினைகள் ஆராயந்து தீர்வு காணும் வகையில் இந்த நடமாடும் சேவை நடாத்தப்படுகிறது.

இதன் போது தேசிய அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்வு காண விருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றும், நாளையும் இடம்பெறும் இந்த நடமாடும் சேவைக்கு வருகை தந்த அமைச்சர் ஜோன் செனவிரத்னவை, பிரதி அமைச்சர் டிலான் பெரேரா, பதுளை மாவட்ட அரச அதிபர் ரோஹன கீர்த்தி திசாநாயக, ஊவா மாகாண ஆளுநர் சீ. நந்த மெதிவ் ஆகியோர் பதுளை மத்திய மகா வித்தியாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

இன்று நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் காணி உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டதோடு, திறமை காட்டிய பாடசாலைகள், எழுத்தாளர்கள் என பலரும் பாராட்டப்பட்டனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .