2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நான்காம் திகதி விசேட விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பெரும் விமர்சையாகக் கொண்டாடும் தீபாவளி பண்டிகை எதிர்வரும் 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளதால் தீபாவளிக்கு முதல் நாளான 4ஆம் திகதி வியாழக்கிழமை, மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கும் இத்தினத்திற்கு பதிலாக எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி மத்திய மாகாணதின் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மத்திய மாகாணத்திலுள்ள கல்விப்பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--