2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக குரங்குகளை பிடித்துச் சென்றால் கைது செய்ய பணிப்பு

Kogilavani   / 2010 நவம்பர் 03 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிக்பாத்)

கண்டி பகுதியிலிருந்து எவரேனும் குரங்குகளை சட்டவிரோதமாகப் பிடித்து அருகிலுள்ள கிராமப்பிரதேசங்களுக்குக் கொண்டு செல்வதை கண்டால் அவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடறுமாறு பிரதி அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பொலிஸ் உயரதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபையின் மாதாந்தக்கூட்டம் நேற்று முன்தினம் பகல் கண்டி கச்சேரியில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றபோதே பிரதியமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே இப்பணிப்புரையை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்த்தனா கண்டி மாவட்டத்தில் தற்போது குரங்குகள் பெருகி மக்களுக்கு தொல்லைக் கொடுப்பதாகவும் கண்டி பிரதேசத்திலிருந்து பலர் குரங்குகளை பிடித்து அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் விட்டுவிடுவதாக மக்கள் தம்மிடம் சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார்.

இச்சபையில் இவ்விவகாரத்தை கவனத்தில்கொண்டு வந்தப்  பின்னரே பிரதியமைச்சர் அங்கு சமூகமளித்திருந்த  பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இப்பணிப்புரையை வழங்கினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--