Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 08 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி,சுவர்ணஸ்ரீ)
பொருட்களின் விலையுயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹட்டன் நகரில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 'மாற்றாந்தாய் போன்று தோட்டத் தொழிலாளர்களை மதிக்காது அவர்களுக்கான மானியங்கள் வழங்கப்பட வேண்டும்,' 'உடனடியாக கோதுமை மாவின் விலையைக் குறைக்க வேண்டும்,' 'தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்,' 'ஜனநாயக தேசிய முன்னணித் தலைவர் சரத் பொன்சேகா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்,' 'பல்கலைக்கழக மாணவர்களுக்கு என்ன நடந்தது?' 'அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான 2500 ரூபாய் சம்பள உயர்வுக்கு என்ன நடந்தது?' போன்ற கோஷங்களை எழுப்பி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு;ள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முரளி ரகுநாதன், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மத்திய மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் கே.கே.பியதாஸ, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் ஹட்டன் வாழ் மக்களும் கலந்துகொண்டுள்ளனர்.
7 minute ago
57 minute ago
Alfred Monday, 08 November 2010 10:02 PM
நடக்கபோவது ஒன்றும் இல்லை
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
57 minute ago