2026 மே 21, வியாழக்கிழமை

dd

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்: இன்று பதவியேற்பு

Freelancer   / 2026 மே 21 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் சார்பில் இருவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ராஜேஷ்குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை த.வெ.க அமைச்சரவையில் நியமிக்க காங்கிரஸ் தலைமை நேற்று ஒப்புதல் வழங்கியது. இவர்கள் இருவரும் அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்கவுள்ளனர்.

இதன்மூலம் தமிழக அமைச்சரவையில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழக அமைச்சரவையில் வழக்குரைஞர் ராஜேஷ் குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை அமைச்சர்களாக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் வழங்கினார். இவர்கள் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர்.

59 ஆண்டுகள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவதால், இது எங்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.

அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ள இருவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தமிழக மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார்கள் என்று நம்புகிறோம். ராகுல் காந்தியால் வகுக்கப்படவுள்ள துணிச்சலான மக்கள் நலன் மற்றும் மக்கள் சார்ந்த அரசாங்கத்திற்காக பாடுபடுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். இவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். விஜய் உடன் சேர்த்து த.வெ.க. அமைச்சரவையில் தற்போது 10 அமைச்சர்கள் உள்ளனர்.

போக்குவரத்துத் துறை, உயர்க் கல்வித் துறை, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை, வேளாண் துறை, பால்வளத் துறை, மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை போன்ற பல்வேறு முக்கியமான துறைகளுக்கு அமைச்சர்கள் ஒதுக்கப்படாமல் உள்ளன.

த.வெ.க. ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே காங்கிரஸ் சார்பில் இருவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது உறுதியாகியுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற வழக்குரைஞர் ராஜேஷ் குமார், பி. விஸ்வநாதன் ஆகியோரை அமைச்சர்களாக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் வழங்கினார். இவர்கள் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்கவுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X