2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மஸ்கெலியாவில் இனந்தெரியாதோரின் கல் வீச்சுக்கு வீடுகள் சேதம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 08 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிசைட் தோட்டத்தில் வீதியோரக் குடியிருப்புகளை இனந்தெரியாத குழுவொன்று நேற்றிரவு கற்களை வீசி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் வீதியில் சென்றவர்களாலேயே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தக்கல் வீச்சுக்கு இலக்காகிய வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் ஏனைய பொருட்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  இந்தத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .