Menaka Mookandi / 2010 நவம்பர் 10 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம்.தாஹிர்)
சடுதியாக உயரும் வாழ்க்கை செலவை குறைக்குமாறும் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் கோரி மக்கள் விடுதலை முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று புதன்கிழமை மாலை 4 மணிளவில் பண்டாரவளை நகரில் நடத்தப்பட்டது.
இதன்போது பண்டாரவளை பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள், துண்டு பிரசுரங்களை விநியோகித்ததுடன் பின்னர் பண்டாரவளை நகர மத்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றையும் கூட்டமொன்றையும் நடத்தினர்.
சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாதைகளும் சுலோகங்களும் ஏந்தப்பட்டிருந்ததுடன் கோஷங்களும் எழுப்பப்பட்டன.
"உயரும் வாழ்க்கை செலவை குறை, மக்களை பட்டினிப் போடாதே, யுத்தம் முடிந்தும் ஏன் இந்த பொருளாதார நெருக்கடி, ஏன் மக்களின் வாழ்க்கை சுமையைக் குறைக்க முடியாது, அப்பாவி பொது மக்களை பலிவாங்காதே, ஜனநாயகத்தை நிலைநாட்டு, அரசியலுக்கு ஜனநாயகம் எங்கே?" என்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்த வித்தியாரட்ன, முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர்கள், தற்போதைய மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
22 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
22 minute ago
5 hours ago
5 hours ago