Kogilavani / 2010 நவம்பர் 10 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
	(எஸ்.சுவர்ணஸ்ரீ)
	
	மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் மாணவர்கள் சாரணியம் துறையில் தமது ஈடுபாட்டினை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய மாகாண மேலதிக் கல்விப்பணிப்பாளர் பி.எஸ்.சதீஸ் தெரிவித்தார். 
	
	அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் இடம் பெற்ற குருளைச்சாரணர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர இவ்வாறு தெரிவித்தார். 
	
	மலையகப் பாடசாலைகளில் சாரணியம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. சாரணியத்தின் மூலமே நற்பிரஜைகளை உருவாக்க முடியம். இன்றைய பெற்றோர்கள் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காட்டும் ஆர்வத்தை தமது பிள்ளைகளின் ஏனைய நலன்களில் செலுத்துவதாக தெரியவில்லை. 
	
	சாரணியத்தில் குறிப்பிட்டுள்ள ஒழுக்கம், கண்ணியம்,  கட்டுப்பாடு,  சமூக பற்று,  மற்றோரை மதித்தல் போன்ற நற்குணங்கள் எமது மாணவர்கள் மத்தியில் குறைவாகவுள்ளது.  இந்தக் குறையினை சாரணிய செயற்பாடுகள் மூலமாக நிவர்த்திக்க முடியும். ஆகவே சாரணர் செயற்பாடுகளுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
	
	அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சிறப்பு அதிதியாக நுவரெலியா மாவட்ட சாரணிய அமைப்பின் உதவி மாவட்ட ஆணையாளர் மகேந்திரன், மற்றும் அட்டன் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுரேந்திரன், நுவரெலியா மாவட்ட சாரணர் சங்க உத்தியோகஸ்தர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
	
	அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கடந்த 25 வருடங்களுக்கு பின்னர்  68 குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டப்பட்டது.
	
	
	 
48 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago