Super User / 2010 நவம்பர் 11 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி பிரதேசத்தில் குப்பைகள் கொட்டும் கொஹாகொடை என்னுமிடத்தில் குவித்துள்ள குப்பைகளை பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாநகர சபைக்கும் பிரதேச மக்களுக்கும் பெரும் பிரச்சினையாக அமைந்துள்ள இக்குப்பைகளை பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்வதன் மூலம் வருமானத்தை பெருவதோடு பிரதேச சூழலையும் பாதுகாக்ககூடியதாக இருக்கம் எனன இத்திட்டத்தினை மேற்கொள்கின்ற பேராதனை பல்கலைகழகத்தின் பேராசிரியர் பஸ்நாயக்க தெரிவித்தார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கனாயக்கா இன்று வியாழக்கிழமை மாலை இத்திட்டத்தின் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 10 மெகா ஹேட் மினசாரத்தினை தயாரிப்பதற்கு போதுமானஎரி வாயுவை உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப் பட்டுள்ளதாக பேராசிரியர் பஸ்னாயக்க மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்துக்கு 2000 ம் மில்லியன் ரூபாய்கள் செலவு செயயவுள்ளதாகவும் இதற்காக வெளிநாட்டு உதவி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

14 minute ago
24 minute ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
24 minute ago
23 Oct 2025