2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தில் குடும்பஸ்தர் கைது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

14  வயதுடைய பாடசாலை மாணவியொருவரை உல்லாச பயணிகள் விடுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின்   பேரில் குடும்பஸ்தர் ஒருவர் கண்டி கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால்  நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

கட்டுகஸ்தோட்டையிலுள்ள  விடுதி அறையொன்றில் பாடசாலை மாணவியொருவருடன் குடும்பஸ்தர் ஒருவர் இருப்பதாக பொலிஸாருக்கு  கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்தே, இவர் கைதுசெய்யப்பட்டார்.

குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  குடும்பஸ்தரையும்  அம்மாணவியையும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பீ.தியகெலினாவல தலைமையில் விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--