2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கண்டியில் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் தலைமறைவு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 16 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி நகரில் போலி நிதி நிறுவனம் ஒன்றினை நடத்தி எட்டு கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த நிலையில் தலைமறைவாகியுள்ள வெளிநாட்டவர் ஒருவர் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

கண்டி நகரில் பிரமீட் முறைப்படி இந்நிதி நிறுவனத்தை நடத்தியுள்ள மேற்படி வெளிநாட்டவர், மேற்படி நிதி நிறுவனத்தில் அங்கத்துவம் வகிப்பதற்காக ஒருவரிடமிருந்து தலா 14 ஆயிரத்து 500 ரூபா பிரகாரம் வசூலித்துள்ளார் என்றும் இவ்வாறாக அவரிடம் சுமார் 5ஆயிரம் பணம் வைப்பு செய்துள்ளனர் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்தள்ளது.
 
இந்நிலையில் குறித்த பணத்துடன் தலைமறைவாகியுள்ள வெளிநாட்டவர் தொடர்பான விசாரணைகள் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X