2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

நோட்டன், டபள்கட்டிங் முச்சந்தி இருளை போக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நோட்டன் - மஸ்கெலியா பிரதான பாதையின் டபள்கட்டிங் சந்தியில் மின்விளக்கொன்றினை பொருத்துமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோட்டன் - மஸ்கெலியா பிரதான பாதையின் டபள் கட்டிங் முச்சந்தியிலிருந்து நோட்டன், மஸ்கெலியா, கலுகல போன்ற பகுதிகளுக்கான பாதைகள் பிரிந்து செல்கின்றன.

இரவு நேரங்களில் இந்தப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இந்தப்பாதையின் ஊடாக இரவு நேரங்களில் பயணிக்கின்ற வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே இந்த டபள்கட்டிங் முச்சந்தியில் மின்விளக்கொன்றை பொருத்துவதற்கு அம்பகமுவ பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன சாரதிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .