Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் 2011ஆம் வருடம் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப்பரீட்சைகள் இன்று 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக கல்லூரி பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட நிபந்தனைக்கேற்ப கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் படி தகுதியானவர்களைத் தெரிவு செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சைகளுக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கேற்ப பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் தமிழ்மொழி மூல பாடநெறிகளான தமிழ், ஆரம்பக்கல்வி, கணிதம், சமூகக்கல்வி, விஞ்ஞானம், கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் ஆகியனவற்றுக்கும் சிங்கள மொழிமூல பாடநெறிகளான சிங்களம், கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக்கல்வி ஆகியனவற்றுக்கும் மாணவர்களைத் தெரிவு செய்வதற்கே இந்த நேர்முகப்பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
அதேவேளை, ஆங்கிலமொழி மூலம் இடம்பெறுகின்ற தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கான நேர்முகப் பரீட்சைகள் அதற்குரிய போட்டிப் பரீட்சைக்குப் பின்பே இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் இசட் புள்ளிகள் அடிப்படையிலும் திறமையின் அடிப்படையிலுமே மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மேலும் நேர்முகப்பரீட்சைக்கு வருகை தரும் பெருந்தோட்டப் பகுதி மாணவர்கள் தமது பெற்றோரின் ஊழியர் சேமலாப நிதியத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கங்கள் குறிப்பிடப்பட்ட தோட்ட அதிகாரியின் கடிதம் கொண்டு வர வேண்டும்.
அத்துடன் பிறப்புச்சான்றிதழில் இந்திய தமிழர் என்பதற்கு பதிலாக தவறுதலாக இலங்கைத்தமிழர் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் இதனை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்களை நேர்முகப் பரீட்சைக்குச் சமூகமளிக்கும் மாணவர்கள் கொண்டு வர வேண்டும் என கல்லூரி பீடாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
2 hours ago
4 hours ago