2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தம்புள்ளையில் வர்த்தகமைய ஊழியர்கள் மீது தாக்குதல்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 19 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை வர்த்தக மையத்தில் சேவையாற்றிய இரு ஊழியர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஊழியர்களால் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ளை வர்த்தக நிலையத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் தூண்டுதலுக்கமைய இனந்தெரியாத கோஷ்டியயொன்று தம்மை மரத்தில் கட்டி கயிற்றால் கழுத்தைக் கட்டி தாக்கியதாகவும் பின்னர் நிர்வாணமாக்கி குளம் ஒன்றில் தள்ளிவிட்டதாகவும் அவர்கள் அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தாக்குதலின் காரணமாக கடும் காயங்களுக்குள்ளாகியுள்ள இசுரங்க தசுன் விஜேரத்ன மற்றும் எஸ்.கே.குமார ஆகியோர் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .