Suganthini Ratnam / 2010 நவம்பர் 19 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
பிரதேச ரீதியிலான அரசியலில் இளைஞர் மற்றும் பெண்களின் பங்களிப்புத் தொடர்பான தெளிவூட்டல் வேலைத்திட்டமொன்று ஹட்டன் சீடா வளநிலையத்தில் இம்மாதம்; 27ஆம் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
உள்ளுராட்சி மன்றம் என்றால் என்ன? அதன் தொழிற்பாடுகளும், 'பிரதேச ரீதியிலான அரசியலில் தங்களது பொறுப்புக்கள் மற்றும் சவால்கள் எனும் தலைப்பில்' பிரதேச ரீதியிலான அரசியலில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் தொழிற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல் வேலைத்திட்டமே நடைபெறவுள்ளது.
இங்கு தற்போதைய உள்ளுராட்சிமன்றங்களில் தெரிவுசெய்யப்பட்டுள்ள இளைஞர் பிரதிநிதிகளும் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறுகின்ற பெண்களும் தத்தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியுமென்பதுடன், சான்றிதழ்களும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனமானது உள்ளுராட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற உள்ளுராட்சி மன்றங்களுக்குரிய தேசிய சம்மேளனமாகும். இந்நிறுவனத்தினால் இலங்கையின் தற்போதைய உள்ளுராட்சி சேவையின் நன்மைக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தி வருவதுடன், விசேடமாக பிரதேச ரீதியிலான அரசியல் பிரதிநிதிகள் சம்பந்தமாக அதிக கவனம் செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
14 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
1 hours ago