2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

தனியார் நிறுவனத்திற்கு குத்தகையில் வழங்கப்பட்ட வாகன தரிப்பிடம் கண்டி மாநகரசபையால் பொறுப்பேற்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி நகருக்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக கண்டி மாநகரசபையால் தனியார் நிறுவனமொன்றிற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட கண்டி பிரதான வாகன தரிப்பிடக் கட்டிடத் தொகுதியை மீண்டும் கண்டி மாநகரசபை இன்று பொறுப்பேற்றது.


நான்கு மாடிகளைக் கொண்ட இவ்வாகனத் தரிப்பிடம் பல கோடி ரூபாய் செலவில் வெளிநாட்டு உதவியுடன் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டது.


சரியான முறையில் இவ்வாகன தரிப்பிடத்தை குறித்த தனியார் நிறுவனம் நடத்தாததால், இதனை நகரசபை பொறுப்பேற்றதாக கண்டி நகர மேயர் ராஜா புஷ்பகுமார தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--