2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

அதிக குளிரால் சுய நினைவு இழந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத், ஆஸிக்)

கம்பளை, அம்புலுவாவ மலைக்குன்றினைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பாடசாலை மாணவர்களில் 18பேர் கடும் குளிர் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு சுய நினைவை இழந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை தற்போது தேறி வருவதாக கம்பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.

எம்பிலிபிட்டிய பாடசாலையொன்றிலிருந்து கம்பளை நகரக்கு சுற்றுலா சென்ற மாணவர்கள் சிலர் அம்புலுவாவ மலைக்குன்றினையும் பார்வையிடச் சென்றுள்ளனர்.

மாலை வேளையில் இவர்களது பயணம் தொடரப்பட்டுள்ளதால் அங்கு நிலவிய கடும் குளிர் காரணமாக 18 மாணவர்கள் சுய நினைவற்ற நிலையிலும் கை, கால்கள் விரைத்த நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்களுக்கான தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில் அவர்களின் உடல்நிலை தற்போது தேறி வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--