2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

உறவினரின் சடலத்தை பலவந்தமாக கொண்டு சென்ற வைத்தியருக்கு பொலிஸார் வலைவீச்சு

Super User   / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை வைத்தியசாலை சவச்சாலையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவினரின் சடலத்தை பலவந்தமாக  கொண்டு சென்ற வைத்தியசாலை வைத்தியர் ஒருவரை கம்பளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கம்பளை அத்காலை பகுதியில் நேற்று  குடும்பஸ்தரொருவர் மரத்தில் இருந்து விழுந்து இறந்துள்ளார். இவரின் சடலம் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது.

பிரேத பரிசோதனையை நேற்று மேற்கொள்ள முடியாமையால் இன்று புதன்கிழமை காலை பிரேத பரிசோதனையை மேற்கொள்வதாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

 ஆனால் இறந்தவரின் உறவினரான வைத்தியர், மரண விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என்று மரண விசாரணை அதிகாரியுடனும் வாக்குவாதப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் மேற்படி வைத்தியர் நேற்றிரவு வைத்தியசாலை பிரேத அறையில் இருந்து பிரேத அறை ஊழியர்களுடன் முரண்பட்ட நிலையில் சடலத்தை பலவந்தமாக எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கம்பளை பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து கம்பளை பொலிஸார் மேற்படி வைத்தியரைத் தேடி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--