2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பொலிஸ் அதிகாரியிடம் வழிப்பறி கொள்ளையர் கைவரிசை

Kogilavani   / 2011 ஜனவரி 12 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கட்டுகஸ்தொட்டை கலகதர பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த  பொலிஸ் அதிகாரியொருவரை வழிபறி கொள்ளையர்கள் கத்தியால் குத்தி தாக்கியுள்ளதுடன், அவரிடமிருந்து 5000 ரூபாய் பணத்தையும்,  கையடக்கத் தொலைபேசியையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கலகெதர பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரியான பீ.ஜீ.கருனாரத்ன  என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

மேற்படி அதிகாரி நேற்று  மாலை தனது கடமையை முடித்துக்கொண்டு   கட்டுக்ஸதொட்டை வதுதலை பிரதேசத்திலுள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் கொள்ளையர்களால் வழிமறிக்கபட்டுள்ளதுடன் கத்திக்குத்துக்கும் இழக்காகியுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய 06  பேரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று  கைது செய்துள்ளதுடன் அவர்களை கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
 
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X