2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்: மாகாண சபை உறுப்பினர் உதயகுமார

Super User   / 2011 ஜனவரி 16 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப்படிவங்களை நாளை 17ஆம் திகதியும் நாளை மறுதினம் 18ஆம் திகதியும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் தலைமைக்காரியாலயத்தில் ஒப்படைக்க முடியும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இத்தேர்தலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக போட்டியிடுவதற்கு இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதால் இவர்களும் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--