2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வீடுகளை பெற உதவுமாறு மண்சரிவால் வீடுகளை இழந்த மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2011 ஜனவரி 21 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டியில் அண்மையில் ஏற்பட்ட  மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் உறவினர்கள் தொடர்ந்தும்  கெட்டம்பே சன சமூக நிலையத்தின் ஒரு சிறிய அறையில் தங்கியுள்ளனர்.

தங்களது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுக்க எந்த ஒரு அமைப்போ அரசோ இது வரை முன் வரவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கு ஒரு வீட்டுத் தொகுதியை அல்லது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ள ஒரு காணித்துண்டை  பெற்றுத் தருவதற்கு எவரும் முன்வராதமைக் குறித்த அவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வாழ்ந்த ஐந்து வீடுகளும் மண்சரிவில் சிக்கி முற்றாக அழிவடைந்துள்ளதுடன் , அதில் சிக்குண்டவர்களில் நான்கு பேர் வைத்திய சாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .