Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 26 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மக்களின் வாழ்க்கைச் செலவீனத்தை கட்டுப்படுத்த முடியாத அரசாங்கமானது, தனது இயலாமையை மறைக்க வெள்ள அனர்த்தத்தை காரணம் காட்டிக்கொள்ள முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க வெள்ள அனர்த்தத்தை காரணம் காட்டுகிறது. கோழி முட்டை மற்றும் மரக்கறிகளின் விலையேற்றத்திற்கு மழை வெள்ளமே அரசு கூறுகிறது. 14 இராணுவ ட்ரெக் வண்டிகளில் கொழும்புக்கு மலைநாட்டுக் காய்கறிகளை எடுத்து வந்து விற்பதனால் காய்கறி விலையை கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் தம்புள்ள, கெப்பட்டிப்பொல போன்ற இடங்களிலிருந்து இன்னும் 500 லொறிகளில் காய்கறிகள் கொழும்புக்கு வருகின்றன.
வெங்காய உற்பத்தியில் ஒழுங்கமைப்புக் கிடையாது. தம்புள்ள, மொனராகலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் ஏககாலத்தில் அறுவடை செய்யப்படுவதில்லை. அவ்வப் பிரதேச மழை வீழ்ச்சியை மையமாக வைத்தே அவை உற்பத்தியாகின்றன. இதைச் சாதமாகக் கொண்டு அவ்வப்போது பகுதி அடிப்படையில் உற்பத்திகளை திட்டமிட முடியும்.
நெல் உற்பத்தியின்போது பெரும்போகத்தில் ஒரு வருடத்திற்கான 80 சதவீத தேவையைப் பூர்த்தி செய்யத் கூடிய அறுவடை கிடைக்கிறது. களஞ்சிய வசதி இன்மையும் விவசாயின் பொருளாதார நெருக்கடியும் அவற்றை உடன் விற்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது. எஞ்சிய உற்பத்தியை அரசு கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தவேண்டும். இதனால் தட்டுப்பாட்டு ஏற்படும்போது அரசு கையிருப்பை பயன்படுத்தமுடியும். இவ்வாறு பல்வேறுபட்ட திட்டமிடப்பட்ட பொருளாதார கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்றார்.
11 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago