Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 15 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
புதிய மாநகரசபையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தம்புள்ளை மாநகரசபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு தயாராகவுள்ள இரு குழுக்களுக்கிடையே நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட கைகலப்பின்போது, ஆதரவாளர் ஒருவரின்; ஏழு பற்கள் உடைக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கைகலப்பின்போது, மற்றுமொரு ஆதரவாளருடைய மோட்டார் வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளையில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் வன்முறை இதுவாகுமெனக் கூறிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago