2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மாணவியை வல்லுறவுக்குட்படுத்தி படம் பிடித்த நபருக்கு பொலிஸார் வலைவீச்சு

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹமட் ஆஸிக்)

17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி தனது கையடக்க தொலைபேசி மூலம் அதனை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து வைத்திருந்த 53 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்வதற்காக அலவத்துகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது உறவினரான இம்மாணவியை சந்தேக நபர் பல முறை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

கையடக்க தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் தலைமரைவாகிவுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாகவும் அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--