Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படும் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
எலிப்பிட்டிய எத்கந்துர பகுதியில் நேற்று சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இரு நபர்களும் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளொன்றில் பின்னால் வந்த இரு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகவும் பொலிஸார் கூறினர்.
காயமடைந்த நபர் கராபிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க உத்தரவின் பேரில் எலிப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Jul 2025