Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதன் மூலம் அதிகமான எமது நாட்டு மாணவர்கள் உயர் கல்வியை பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதுடன், பெருமளவில் வெளிநாட்டு செலாவாணியை பெற்றுக்கொள்ளவும் உதவுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் நடைபெற்ற கண்டி விஹார மஹாதேவி மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
தற்போது உயர்தரத்தில் சித்தியடையும் மாணவர்களுள் சிறு தொகையினரே பல்கலைகழகத்திற்கு செல்கின்றனர். ஏனையவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். எனவே தான் ஜனாதிபதி உயர் கல்வி அமைச்சு மூலம் தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைத்தவுடன் அதிகமான மாணவர்களுக்கு இலகுவாக உயர் கல்வியை பெற்றுக்கொள்ளமுடியும். இதேபோன்று வெளிநாட்டு மாணவர்களும் எமது நாட்டில் கல்வி கற்கலாம். இதன் மூலம் எமக்கு வெளிநாட்டு செலாவாணி கிடைக்கும். தற்;போது பல்லாயிரக்கணக்கான எமது நாட்டு மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்றனர். இதற்காக பெருந்தொகையான பணத்தை அவர்கள் செலவு செய்கின்றனர். இப்பணத்தை எமது நாட்டில் தக்கவைத்துக் கொள்வதற்கும் இத்தனியார் பல்கலைக்கழகம் வழிவகுக்கும் என்றார்.
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago