2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவை பாதிப்பு

Super User   / 2011 மார்ச் 25 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

மலை நாட்டுக்கான ரயில் சேவையில் இன்று வெள்ளிக்கிழமை தடங்கல் ஏற்பட்டுள்ளது.

நானு ஓயாவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஒன்று வட்டகொடை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை தடம்புரண்டமையை தொடர்ந்தே ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில், கொழும்பிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட ரயில்கள் தலவாகலை வரை இடம்பெற்றதோடு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில்கள் வட்டகொடை வரை இடம்பெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தடம்புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .