Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 28 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
கினிகத்தேனை அல்லித்தோட்டம் இரண்டாம் பிரிவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது தேருக்கு பின்னால் சென்ற சிறுவர்களில் ஒருவர் மர்மமான முறையில் மரணமானதுடன், மேலும் மூன்று சிறுவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவமொன்று கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
டிப்பர் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சப்பரத்தைத் தொடர்ந்து சென்ற சிறுவர்கள், மயக்க நிலைக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களை உடனடியாக கினிகத்தேனை மாவட்ட வைத்தியசாலையில் தோட்ட மக்கள் அனுமதித்துள்ளனர். இவர்களின் ஒருவர் உயிழந்துள்ளார். சிறுவனின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கினிகத்தேனை மற்றும் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
58 minute ago