Kogilavani / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம். தாஹிர்)
பண்டாரவளை அரசினர் வைத்தியசாலை வளாகத்திலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலத்தை கண்டெடுத்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை வெளிமடை வீதியில் வசித்த வந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், சில தினங்களுக்கு முன்னால் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து தேடுதல் நடத்திய பொலிஸார் குறித்த வயோதிபரின் சடலத்தை நேற்று திங்கட்கிழமை வளாகத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
மரண பரிசோதனையின் பின்பு சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
01 Feb 2026