Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
இலங்கையின் பல பாகங்களுக்கும் ஹெரோயின் போதை பொருளை விநியோகம் செய்ததாக கூறப்படும் கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த குடு ராணி என்று அழைக்கப்படும் பெண் ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் நேற்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளனர்.
அலவத்துகொடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இப் பெண் கைது செய்யப்பட்டதாக அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.
இப் பெண்ணை கைது செய்யும் போது விற்பனைக்காக அவரிடம் இருந்த 5.4 கிராம் ஹெரொயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இப் பெண்ணை கண்டி மேலதிக நீதவான் தனூஜா ஜயதுங்க முன் ஆஜர் செய்த போது மேலும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அலவத்துகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago