2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மலையகத் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்திய தூதரகம் உதவுகிறது: உதவி தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா

Menaka Mookandi   / 2011 ஜூன் 10 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பல்வேறு  வகையான உதவிகளை வழங்குகின்ற அதேவேளை மலையகத்தில் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் கல்வித்தரத்தினை உயர்த்துவதற்காக விசேட உதவிகளை வழங்கி வருவதாக கண்டி உதவி இந்திய தூதுவர் ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்தார்.

கண்டி உதவி இந்திய தூதுவராலயத்தின் அனுசரணையுடன் நாவலப்பிட்டி பிரதேசத்திலுள்ள 18 தமிழ் பாடசாலைகளுக்கு நூல்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் நாவலப்பிட்டி பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பிரதேச முக்கியஸ்தர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

கண்டி உதவி இந்திய தூதுவர் தொடர்ந்து பேசுகையில், 'மலையகத்தில் வாழுகின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் கல்வியில் பின்தங்கிய நிலைமையில் வாழுகின்றமைக்கு பொருளாதார காரணிகளும் வாழ்வியல் காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன.

இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்கள் மத்தியில் தயக்கத்துடன் வாழக்கூடிய நிலையிலுள்ளனர். இதனை நான் மலையகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்ததன் மூலம் அறிந்து கொண்டுள்ளேன்.

இன்றைய உலகம் பல வழிகளிலும் முன்னேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்சியினால் பல்வேறு தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவுள்ளது.

எனவே மலையகத்தில் வாழுகின்ற மாணவர்கள் கல்வியிலும் தொழில்நுட்பத்துறையிலும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். கண்டி உதவி இந்தி தூதரகம் மலையகத் தமிழ் பாடசாலைகளுக்கு வழங்குகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .