Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 ஜூன் 12 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ )
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமி மலை ஸ்காப்ரோ கொழும்பு தோட்டத்தின் ஆற்றோர பகுதியிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை குறிப்பிட்ட ஆற்றோர பகுதிக்கு தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள், கரையொதுங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கும் தோட்ட நிருவாகத்திற்கும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று மாலை அவ்விடத்திற்கு வருகை தந்த ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் ராமமூர்த்தி, விசாரணைகளை மேற்கொண்டதோடு சடலத்தினை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கமாறு மஸ்கெலியா பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கினார்.
தற்போது அச்சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago