2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அக்குறணை வர்த்தக நிலையத்தில் தீ

Suganthini Ratnam   / 2011 ஜூன் 20 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்,சீ.எம்.ரிஃபாத்)   

அக்குறணை நகரில் வர்த்தக நிலையமொன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் மாடிக்கட்டடம் முற்றாக தீப்பிடித்து எரிந்து சேதமாகியுள்ளது. இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கட்டடத்தில்  தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னமும் கண்டறிப்படவில்லை. இருப்பினும் மின் ஒழுக்கினால் இந்த தீ ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தீ காரணமாக பல இலட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .