2021 மே 18, செவ்வாய்க்கிழமை

மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைவு

Super User   / 2011 செப்டெம்பர் 24 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம். தாஹிர்)

மலையக மக்கள் முன்னணி சார்பாக பதுளை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் நோபல் சுரேஸ் நேற்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

பதுளை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை பதுளை வெலேகடை பகுதியில் பிரசார கூட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போதே, நோபல் சுரேஸ் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டதுடன்  ரணில் விக்கிரசிங்கவிடமிருந்து கட்சி அங்கத்துவத்தையும் பெற்று கொண்டார்.

இந்த பிரசார கூட்டத்தில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, ஊவா மாகாண சபை உறுப்பினர் கே.வேலாயுதம், முன்னால் பிரதியமைச்சர் எம்.சச்சிதானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .