2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

இரண்டு ஏக்கர் நில பரப்பில் விசேட அதிரடி படை முகாம் அமைத்தலுக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 04 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தலவாக்கலை வட்டகொடை கீழ் பிரிவு தோட்டத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நில பரப்பில் விசேட அதிரடி படை முகாமொன்று அமைக்கப்படவுள்ளமைக்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தத்தமது தொழிற் சங்கங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த இரண்டு ஏக்கர் நில பகுதி கடந்த 2001மே மாதம் 10 ஆம் திகதி தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியிடமிருந்து சுவீகரிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட காணி சீரமைப்பு சபை வட்டகொடை தோட்ட முகாமையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட இந்த இடத்தில் முகாமொன்றை அமைப்பதற்காக உரிய தரப்பிடம் குறித்த நிலத்தினை ஒக்டோபர் 6ஆம் திகதி கையளிக்குமாறும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விடயத்துக்கு வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--