Suganthini Ratnam / 2011 நவம்பர் 16 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம்.ரம்ஸீன்)
புசல்லாவ கெமுனுபுரவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.
நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும் கம்பளையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த கொள்கலன் லொறியும் ஒன்றுடனொன்று மோதியே இந்த விபத்து சம்பவித்தது.
முச்சக்கரவண்டியில் பயணித்த எம்.சமரவீர (வயது 61) என்ற குடும்பஸ்தரே இந்த விபத்தில் பலியானார். அவரது மனைவியும் மகனும் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புசல்லாவ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
18 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
37 minute ago