Super User / 2011 நவம்பர் 19 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.தியாகு)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 66ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நுவரெலியா பொது வைத்தியசாலையில் வசதி குறைந்த 66 பேருக்கு இன்று சனிக்கிழமை கண் சத்திர சிகிச்சை செய்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் புனர்நிர்மானம் செய்யப்பட்ட கண் சத்திர சிகிச்சை நிலையத்தை அமைச்சர் நவீன் திசாநாயக்க நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் திறந்துவைத்தனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன ஆலயத்தில் விசேட பூஜைகள் இன்று சனிக்கிழமை இடம்பெற்றன.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விசேட பூஜைகளை தொடர்ந்து 100 நடுத்தர குடும்பத்தினருக்கு உலர் உணவு பொருட்களும் 148 ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு புத்தக பொதிகளும் இரண்டு சக்கர நாட்காளிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தனியார் போக்குகவரத்து துறை அமைச்சர் சீ.பி.ரட்ணாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago