2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கப்பட்டமைக்கு மத்திய மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

Kogilavani   / 2011 நவம்பர் 22 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களை ஆளும்தரப்பு எம்பிகள் தாக்கிய சம்பவமானது கண்டிக்கத்தக்க மிலேச்சத்தனமான ஜனநாயக விரோதச் செயலாகும் எனவும் இச்செயலானது சர்வததேச ரீதியில் இலங்கை தொடர்பாக ஏற்பட்டிருந்த தவறான கருத்தை மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது எனவும் மத்திய மாகாண சபையின் எதிரக்கட்சி தலைவர் கே.கே.பியதாஸ தெரிவித்தார்.

மத்திய மாகாண சபை எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தாhர்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில் ஜனாதிபதி வரவு செலவுத்திட்ட உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த போதும் சபாநாயகரின் முன்னிலையில் எதிர்கட்சியினரை ஆளும்தரப்பினர் தாக்கியமை ஜனாநாயகத்தின் தாய் வீடான நாடாளுமன்றத்திற்கு சர்வதேச மட்டத்தில் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

இச்செயலை எந்தவொரு ஜனநாயகவாதியும் ஏற்றுக்கொள்ளமாட்டார். எனவே நாம் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .