2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

'தனியார் பல்கலை கழகங்களை ஆரம்பிக்கும் முயற்சி இலவச கல்விக்கான முற்றுப்புள்ளி'

Kogilavani   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம். எம். எம். ரம்ஸீன்)

'தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் நாட்டில்  இலவச கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்படும் முயற்சியாகும். இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் தோன்றி வரும் எதிர்ப்புக்ளை அடக்குவதற்காக அரசு மாணவர்களை அடக்கி ஆள முற்படுகின்றது. மாணவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியும் வகுப்புத்தடைகளை ஏற்படுத்தியும் மாணவர்கள் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' என  பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் லங்கா மஹேல தெரிவித்தார்.

அரசு பல்கலைக்கழக கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சியை கைவிடுமாறும் கோரியும் மாணவர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகளை கைவிடுமாறு வலியுறுத்தியும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பிக்கு மாணவர்கள் இணைந்து பேராதனை கலஹா சந்தியில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.

இதன்போதே லங்கா மஹேல இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 
இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டில் இலவச கல்வியை இல்லாமல் செய்ய மேற்கொள்ளும் சகல முயற்சிகளை வன்மையாக எதிர்க்கின்றோம். இம்முயற்சியை எவர் மேற்கொண்டாலும் அது ஏழைகளின் கல்விக்கு வைக்கும் வேட்டு ஆகும். அரசியல் ஆதாயத்திற்காக ஏழைகளின் கல்வியில் கைவைக்க முயற்சிப்பவர்கள் உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். மாணவர்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகள் மூலம் மாணவர்களின் குரலை ஒரு போதும்  நசுக்க முடியாது.

எமது சகோதர மாணவர்கள் நால்வர் போகம்பறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும். இம்மாணவ சகோதரர்களின் கல்வியை தொடர இடமளிக்க வேண்டும்.  பல்கலைக்கழகங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டியவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர். அரசின் வரவு செலவுத்திட்டம் தனியார் கல்விக்கு ஊக்கமளிப்பதாகவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இப்போராட்டம் நண்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகி ஒரு மணித்தியாலாம் வரை இடம்பெற்றது.  இதில் பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களையும் சேர்ந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்க பிக்கு மாணவர்கள் உட்பட மாணவர்கள் பங்குபற்றினர்.

இதனால் பேராதனை –கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.


  Comments - 0

 • vallal Monday, 05 December 2011 05:42 AM

  ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகின்றது. எமது நாட்டுப் பணம் வெளிநாட்டில் விரயமாகின்றது. அதை எமது நாட்டில் செலவழித்தால் என்ன? அங்கு படிக்கும் திறம் எல்லோருக்கும் தெரியும்.

  Reply : 0       0

  ar Thursday, 08 December 2011 12:13 PM

  வள்ளல் , நீங்கள் அனுபவிக்கும் வரை புரியாது.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .