2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

தீபாவளியை முன்னிட்டு மத்திய, சப்ரகமுவ மாகாணத் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

A.P.Mathan   / 2012 நவம்பர் 11 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையின் முதல் நாளான 12ஆம் திகதி இந்த விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானங்களை மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சும் சப்ரகமுவ மாகாண கல்வியமைச்சும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலுமுள்ள தமிழ் பாடசாலைகளுக்கே நாளை 12ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .