2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

மஸ்கெலியாவில் அதிக பனிமூட்டம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 15 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆர்.கமலி)


சிவனொளிபாத மலைக்குச் செல்லும் நல்லத்தண்ணி பாதையில் ரிக்காடன் பகுதியிலும் மஸ்கெலியா பகுதியிலும் நேற்று புதன்கிழமை இரவு முதல் அதிகளவான பனிமூட்டம் காணப்படுகின்றது.

அத்துடன், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிக்கத்ஹேன தொடக்கம் வட்டவளைவரையும் நேற்று புதன்கிழமை இரவு முதல் அதிகளவு பனிமூட்டம் காணப்படுகின்றது.

இந்தப் பகுதிகளில் அதிகளவான மரங்கள் காணப்படுவதால் பனிமூட்டத்துடன் சேர்ந்து இருளும் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் வாகன சாரதிகள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். வாகனங்களின் மின்விளக்குகளை ஒளிரவிட்டுக்கொண்டு வாகனங்களை செலுத்துகின்றபோதிலும், முன்னால் வரும் வாகனங்களை அடையாளம் காண்பதில் சிரமமாக உள்ளதாக வாகன சாரதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, மிகுந்த அவதானத்துடன்  தங்களது வாகனங்களை செலுத்துமாறு வாகன சாரதிகளுக்கு நுவரெலிய மாவட்ட செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .