2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

கம்பளை ஜினராஜ கல்லூரியில் சுகாதார பரிசோதனை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.எம்.எம்.ரம்ஸீன்)


கம்பளை ஜினராஜ கல்லூரியில் விசக்கிருமிகளால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டமையைத் தொடர்ந்து  சுகாதார பரிசோதனைக் குழு இன்று வியாழக்கிழமை பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

கம்பளை ஜினராஜ கல்லூரியில் மாணவிகள் விசக்கிருமிகளால் பாதிக்கப்பட்ட 105 மாணவிகள்  தொடர்ந்து கம்பளை வைத்தியசாலையிலல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இப்பாடசாலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை பரவியதாக தெரிவிக்கபப்டும் விசக்கிருமி மற்றும் மாணவிகளுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை தொடர்பாக தேசிய மாகாண மற்றும் உள்ளூர் சுகாதார பரிசோதனைக் குழுக்கள் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளன. 

இக்கல்லூரியில் நிர்மானிக்கபட்ட புதிய வகுப்பறைக் கட்டிடத்தொகுதியில் இருந்த போது ஒவ்வாமை நிலை ஏற்பட்டதாக மாணவிகள் தெரிவிக்கும் நிலையில் சுகாதார பரிசோதனை குழுக்கள் அப்பகுதியில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளன.

கம்பளை ஜினராஜ கல்லூரியின் புதிய கட்டிடத்தொகுதியில் தூசு துணிக்கைகள் ஆரம்பக்கட்டத்தில் பரிசோதிக்கட்டு வருகின்றது. ஆனால் இதுவரை இந்த ஒவ்வாமை நிலைக்கான காரணம் இதுவரை திட்டவட்டமாக அறியப்படவில்லை.

எனினும் தேசிய மற்றும் மாகாண சுகாதாரப் பரிசோதனைக் குழுக்கள் தொடர்ந்தும் ஒவ்வாமைக்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றது. எப்படியாயினும் இந்நிலை தூசு துணிக்கைகள் ஊடாக ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாக கம்பளை நகரசபை பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி ஜயசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை கம்பளை போதனை வைத்தியசாலையில்  நேற்று விசக்கிருமிகளினால் பாதிக்கப்பட்ட மாணவிகளில் 105பேர் தொடர்ந்து இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கம்பளை வைத்தியசாலைப் பணிப்பாளர் சரத் வீரபண்டார தெரிவித்தார். இம்மாணவிகளை இன்று கம்பளை வலய கல்விப் பணிப்பாளர் திருமதி வீரகோன் பார்வையிட்டார்.

மேலும் கம்பளை பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள மழையுன் கூடிய  காலநிலை மாற்றத்தினால் மாணவிகளின் ஒவ்வாமை நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதில் தாமதம் காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இம்மாணவிகள் பெருமளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டமையால் வைத்தியசாலை விடுதிகளில் நிலவும் இடநெருக்கடியால் ஒரே கட்டிலில் இரண்டுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .