2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

வெவண்டன் தோட்டத்தில் கற்பாறைகளின் சரிந்து வருவதால் மக்கள் இடம்பெயர்வு

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                         (எஸ்.சுவர்ணஸ்ரீ)
கொத்மலை பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட தவலந்தென்ன வெவண்டன் தோட்டப்பகுதியின் மலை உச்சியிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்துவருவதால் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய மக்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து தவலந்தென்ன தோட்டத்தின் மலை உச்சியிலிருந்து கற்பாறைகள் உருண்டு வந்து பல இடங்களில் தேங்கி உள்ளன.

இந் நிலையில் இக் கற்பாறைகள் உருண்டு வரக்கூடியப் பகுதியிலுள்ள தோட்டக் குடியிருப்புக்களைச் சேர்ந்த 17 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் அறிவித்ள்ளார்.

இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்களை வெவண்டன்  தோட்டக் கோயிலிலும் பாடசாலை மண்டபத்திலும் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொத்மலை பிரதேசசபை உறுப்பினர் கனகசபை தெரிவித்தார்.

இந்த நிலையில் கற்பாறைகள் உருளத்தொடங்கியுள்ளதால் வெவண்டன்  தோட்டத்தைச் சேர்ந்த மேலும் 23 குடும்பங்களைச் சேர்ந்தோர் அச்ச நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .